காவலர் வீர வணக்க நாளையொட்டி காவலர் நினைவு சின்னத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் இருக்கும் காவலர் நினைவு சின்னத்தில் அவர் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து காவல் துறையில் பணிபுரிந்து மறைந்த காவல் ஆளிநர்களின் குடும்பங்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் தொகைக்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார்.