விடுமுறை தினத்தை ஒட்டி நெல்லையில் உள்ள அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
புகழ் பெற்ற இந்த அருவியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது வழக்கம். அந்த வகையில் தீபாவளி உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாகப் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வருகை தந்தனர்.
அவர்கள் அனைவரும் அருவியில் குளித்தும், இதமான சூழலை ரசித்தும் மகிழ்ந்தனர். முன்னதாக அருவியின் நுழைவு பகுதியில் சுற்றுலாப்பயணிகளிடம் வனத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.