கும்பகோணத்தில் கனமழை காரணமாகப் பல்வேறு இடத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய வட்டங்களில் விட்டு விட்டுக் கனமழை பெய்து வருகிறது.
இதனால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி காட்சியளிக்கிறது. மழைநீர் வடிய இருந்த கட்டமைப்புகள் முறையாகப் பராமரிக்கப்படாததால் மழைநீர் தேங்கியுள்ளதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பல்வேறு சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.