திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் இரண்டு ராட்சத மரங்கள் வேருடன் சாய்ந்தன.
செங்குன்றம் காவல் நிலையம் அருகே நகராட்சி நிர்வாகம் சார்பில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
அப்போது அங்கிருந்த அத்தி மற்றும் கல் தேக்கு மரங்களின் வேர்களை ஊழியர்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அங்குப் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால், அந்த இரண்டு மரங்களும் வேருடன் சாய்ந்ததில், கீழே நிறுத்தப்பட்டிருந்த காரும், இருசக்கர வாகனமும் சேதமடைந்தன.