ரஷ்ய அதிபர் புதின் மேற்பார்வையில், அணு ஆயுத படைகளின் போர் ஒத்திகை நடைபெற்றது.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் உடன்பாடில்லை என ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜியோ லவ்ரவ் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புதினும் சந்திக்கும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ரஷ்ய அணு ஆயுத படைகளின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ரஷிய அதிபர் புதின் மேற்பார்வையிட்டார்.
நிலம், நீர், ஆகாயத்தில் பயன்படுத்தப்படும் அணு ஆயுதங்கள் ஒத்திகையில் ஈடுபடுத்தப்பட்டன.
கண்டம் விட்டுக் கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள், விமானம் மூலம் ஏவப்படும் ஏவுகணைகள், நீர்மூழ்கி கப்பல், குண்டுவீச்சு விமானங்கள் ஆகியவையும் ஈடுபடுத்தப்பட்டன.
















