மத்தியப் பிரதேசத்தில் கார்பைட் துப்பாக்கியைப் பயன்படுத்தி பட்டாசு வெடித்த 14 சிறுவர்களின் பார்வை பறிபோனது.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கடந்த 20ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள விதிஷா மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கார்பைட் துப்பாக்கியைப் பயன்படுத்தி பட்டாசு வெடித்துள்ளனர்.
இதில், 122க்கும் மேற்பட்டோர் கடுமையான கண் காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் 14 பேர் பார்வையை இழந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே, தடை செய்யப்பட்ட கார்பைட் ரக துப்பாக்கியை விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
















