மெட்டாவில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 600 ஊழியர்களுக்குப் பணி வழங்குவதாகக் கூறிய இந்திய வம்சாவளி தொழில்முனைவோரின் அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது.
AI தொழில் நுட்பம் வந்தபிறகு பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை நிறுவனங்கள் பணிநீக்கம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
அந்த வகையில், மெட்டா நிறுவனம் தற்போது சுமார் 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மெட்டாவில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வேலை தருவதாக, இந்திய வம்சாவளி தொழில்முனைவோரான சுதர்ஷன் காமத் தெரிவித்துள்ளார்.
இவர் சான் பிரான்சிஸ்கோவில் ஸ்மாலெஸ்ட் AI எனும் ஸ்டார்ட் அப்நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
வேலை வாய்ப்புகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மெட்டாவில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு 200,000 முதல் 600,000 டாலர்கள் வரை அடிப்படை சம்பளம் மற்றும் நிறுவனத்தின் பங்குகள் ஆகியவற்றை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
சுதர்ஷன் காமத்தின் அறிவிப்பு பல்வேறு தரப்பில் இருந்தும் வரவேற்பை பெற்று வருகிறது.
















