நியூயார்க் மாகாண தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் பணிபுரிந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மெஹல் கோஸ்வாமி என்பவர், ஒரே நேரத்தில் இரண்டு வேலை செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசுப் பணியிலிருந்து கொண்டே மெஹல் கோஸ்வாமி மால்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்ததாகத் தெரிகிறது.
இதன்மூலம் மெஹல் கோஸ்வாமி வரி ஏய்ப்பு செய்ததாகவும், திருட்டில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டில் கோஸ்வாமி சுமார் 98 லட்ச ரூபாய் சம்பளமான பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 15ம் தேதி கோஸ்வாமி கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 15 ஆண்டுகள்வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
















