தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025-ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டதிருத்த மசோதா மறுஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், கல்வியாளர்கள், துறைசார்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் முன்வைத்த கருத்துகளின் அடிப்படையிலும், தனியார் பல்கலைக்கழக சட்டதிருத்த மசோதா திரும்பப் பெறப்பட்டு மறுஆய்வு செய்யப்படும் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
















