சிறுநீரக பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 74.
‘தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே, ஓம் சாந்தி ஓம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற சதீஷ் ஷாவின் மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சதீஷ் ஷாவின் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
















