விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காணாமல் போன இளைஞர் இரண்டு நாட்களுக்குப் பிறகு சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆத்திபட்டியை சேர்ந்த அரவிந்த்சாமி அப்பகுதியில் உள்ள இறைச்சி கடையில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி மாலை காணாமல் போனார்.
இதுகுறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில், ஆத்திப்பட்டியில் உள்ள கண்மாயில் அரவிந்த்சாமி சடலமாகக் கிடந்தார்.
தகவலறிந்து சென்ற போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினர், இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இளைஞரின் இறப்பு குறித்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















