ஐக்கிய நாடுகள் சபையின் முதல் சர்வதேச இணைய குற்றத் தடுப்பு ஒப்பந்தத்தில் 65 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
கிழக்காசிய நாடான வியட்நாமின் ஹானோய் நகரில் இணைய குற்றத் தடுப்பு குறித்த கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உலக நாடுகளின் பிரதிநிதிகள் 65 பேர், இணைய குற்றத் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம், ஐந்து ஆண்டுகள் பேச்சுக்குப் பின், கடந்த 2024 டிசம்பரில் ஐ.நா பொது சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் டிஜிட்டல் ஒத்துழைப்புக்கான ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் இணையத்தில் நடக்கும் குற்றங்களான நிதி மோசடி உள்ளிட்டவற்றை குறித்து விசாரிக்கவும், வழக்கு தொடரவும் தேவையான உலகளாவிய சட்ட கட்டமைப்பை உருவாக்குகிறது.
இந்த ஒப்பந்தத்தில் 65 நாடுகள் கையெழுத்திட்டாலும், 40 நாடுகள் ஒப்புதல் அளித்த 90 நாட்களுக்குப் பின் நடைமுறைக்கு வரும் என கூறியுள்ளன.
கையெழுத்திடும் நிகழ்வு என்பது ஒரு நாடு இந்த ஒப்பந்தத்தில் இணைவதற்கான அதன் விருப்பத்தை மட்டுமே குறிப்பது குறிப்பிடத்தக்கது.
















