விடுமுறையை கொண்டாட கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள், குடும்பத்துடன் சூரிய உதயத்தை கண்டு மகிழ்ந்தனர்.
புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் மழை குறைந்ததாலும், விடுமுறை தினம் என்பதாலும் கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சன் வியூ பாய்ண்ட் பகுதியில் குடும்பம் குடும்பமாகத் திரண்ட சுற்றுலா பயணிகள், மேகமூட்டத்திற்கு மத்தியில் தென்பட்ட சூரியனை கண்டு ரசித்தனர். பின்னர் கடலில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.
















