தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள், மழைநீரில் மூழ்கிய கழுகு பார்வை காட்சி வெளியாகி உள்ளது.
கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
தற்போது அங்குக் கனமழை பெய்வதால், விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் மழைநீர் வடிய வழியில்லாமல் பயிர்கள் அழுகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் விவசாயிகள், ட்ரோன் மூலம் கழுகு பார்வை காட்சியைப் படம் பிடித்துச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
















