உலகின் முதல் அணுசக்தியால் இயங்கும் குரூஸ் ஏவுகணையை ரஷ்யா சோதித்தது.
உக்ரைன், ரஷ்யா இடையே ஆயிரத்து 300 நாட்களை கடந்து போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் பல்லாயிர கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சூழலில், உலகின் முதல் அணுசக்தியால் இயங்கும் குரூஸ் ஏவுகணையான பியூரெவெஸ்ட்னிக்கை ரஷ்யா வெற்றிகரமாகச் சோதித்தது.
மேலும், ரஷ்யா மீது தீவிரமாகத் தாக்குதல் நடத்தப்பட்டால், தங்கள் ராணுவம் கடுமையாகப் பதிலடி கொடுக்கும் என உக்ரைனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
















