தென் சீன கடற்பரப்பில் அமெரிக்க போர் விமானமும், கடற்படை ஹெலிகாப்டரும் விழுந்து விபத்துக்குள்ளாகின.
மத்திய கிழக்கு கடற்பரப்பில் செல்லும் வர்த்தக கப்பல்களை யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்கி வருகின்றனர்.
எனவே, கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளித்து, கண்காணிக்கும் பணியில் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானந்தாங்கிக் கப்பல் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில், கப்பலில் இருந்து புறப்பட்ட எம்எச்-60ஆர் ரக ஹெலிகாப்டர் மற்றும் ஏ-18எஃப் சூப்பர் ஹார்னெட் ரக போர் விமானம் விபத்தில் சிக்கி கடலுக்குள் விழுந்தது.
நல்வாய்ப்பாக ஹெலிகாப்டரில் இருந்த 3 வீரர்களும் விமானத்தில் இருந்த 2 விமானிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
















