பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் கபடி போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கார்த்திகாவிற்கு கண்ணகி நகரில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை கண்ணகி நகர் காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், தாம்பரம் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கார்த்திகாவிற்கு மாலை, கிரீடம், பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.
பின்னர், குதிரைகள் பூட்டிய சாரட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட கார்த்திகாவை, வழிநெடுக பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மலர் கொடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திகா, “கண்ணகி நகர் மக்கள் அனைவரும் தம்மை ஆதரித்தாகக் கூறினார்.
முதலமைச்சர் ஸ்டாலின், ஊக்கத்தொகை வழங்கியது ஊக்கமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், வீடும், அரசு வேலையும் வழங்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்ததாகக் கூறினார். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே தமது இலக்கு என்றார்.
















