கந்தசஷ்டி விழாவை ஒட்டித் திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பக்தர்கள் “தண்டு விரதம்” மேற்கொண்டு வருகின்றனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் 3ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி கோயிலில் கந்தசஷ்டி விழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
விழாவின் 6ம் நாளான இன்று பழனி அடிவாரத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி காய்கறி மற்றும் தண்டுகளை மட்டும் உட்கொள்ளும் ‘தண்டு விரதத்தை’ பக்தர்கள் மேற்கொண்டுள்ளனர்.
சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு பழநியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
















