வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தைச் சூழ்ந்த ஏரி நீரை உடனடியாக வெளியேற்றுமாறு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியாத்தம் அடுத்த காந்தி நகர் பகுதியில் இருந்த 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில், 20 ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாமல் இருந்து வந்தது.
இதையடுத்து, கடந்த 2010-ம் ஆண்டில் சுமார் இரண்டரை ஏக்கர் இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டி திறக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கனமழையின் காரணமாக ஏரி நிரம்பி நீதிமன்ற வளாகத்தை வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் வாகனத்தை நிறுத்தி வைக்க முடியாமல் சிரமமடைந்த வழக்கறிஞர்கள், உடனடியாக ஏரி நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















