பிரபல பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி நடிகரான சதீஷ் ஷா காலமானதை தொடர்ந்து, அவரது இறுதிச் சடங்குகள் மும்பையின் வி.பிளார்லே பவன் ஹான்ஸ் மயானத்தில் நடைபெற்றது.
நகைச்சுவையில் முத்திரை பதித்த சதீஷ் ஷா, சிறுநீரகக் கோளாறு காரணமாக 74 வயதில் காலமானார்.
அவரது இறுதிப் பயணத்தின்போது, திரையுலகினர், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
பிரபல தொலைக்காட்சி தொடரான சாராபாய் வெர்சஸ் சாராபாயில் அவருடன் நடித்த ராஜேஷ் குமார், சதீஷ் ஷாவின் உடலைத் தோளில் சுமந்து சென்றார். பின்னர் அவரது உடல் வி.பிளார்லே பவன் ஹான்ஸ் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
















