ஆலந்தூரில் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சரவண பவன் உணவகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஆலந்தூர் மற்றும் பரங்கிமலை பகுதிகளில் குத்தகை காலம் முடிந்த அரசு நிலங்கள் மற்றும் அவற்றிலுள்ள கட்டிடங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆலந்தூரில் உள்ள சரவண பவன் உணவகம் குத்தகை காலம் முடிந்தும் செயல்பட்டு வந்தது.
இது தொடர்பான வழக்கில் உணவகம் உள்ள நிலத்தினை கையகப்படுத்தலாம் என நீதிமன்றம் ஆணையிட்டது.
அதன்படி 300 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த இடத்தை மீட்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். தொடர்ந்து அங்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் சரவணபவன் உணவகத்தின் பெயர் பலகைகளை அகற்றி சீல் வைத்தனர்.
















