நார்வேயில் இயற்கை அழகோடு இணைந்த தனித்துவமான அனுபவத்தை வழங்கும் ‘சால்மன் ஐ’ உணவகம் வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்த்து வருகிறது.
கோபன்ஹேகனில் உள்ள க்வோர்னிங் டிசைனால் வடிவமைக்கப்பட்டுள்ள மிதக்கும் உலோக கண்ணாடி உணவகம், 11 ஆயிரம் சதுர அடியில் மிகப்பெரிய வாக்-இன் ஆர்ட் உணவகமாக நிறுவப்பட்டுள்ளது.
இந்த உணவகத்தின் வடிவமைப்பு சால்மன் மீனின் கண்களைப் பிரதிபலிக்கும் விதமாக நிறுவப்பட்டு இருப்பதால் ‘சால்மன் ஐ’ உணவகம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஐரிஸில் உணவகத்தில் உணவு அருந்தும் நபர்களுக்கு இயற்கையின் அழகும் விருந்தாகப் பரிமாறப்படுகிறது.
உணவுக்கான விலை இந்திய மதிப்பில் 41 ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. இருப்பினும் இயற்கையின் அழகை ரசித்தவாறு மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்ச்சியை உருவாக்கிக் கொள்கின்றனர் மக்கள்.
















