தமிழகத்தில் 5.13 சதவீதம் விவசாயிகளுக்குச் சிறுநீரக செயல்திறன் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
23-ஆம் ஆண்டு ஆகஸ்ட் – செப்டம்பர் காலகட்டத்தில் சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறை சார்பில் விவசாயிகளிடையே கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மொத்தம் 125 கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 350 விவசாயகளிடம் சிறுநீரக செயல் திறன் ஆய்வு செய்யப்பட்டது. அதில், 17 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, மீண்டும் மறுபரிசோதனை நடத்தியதில் அந்த விகிதம் 5.31 சதவீதமாகக் குறைந்தது. அவர்களில் 50 சதவீதம் பேருக்குச் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, மரபணுப் பாதிப்பு என எந்தவிதமான இணை நோய்களும் இல்லை.
நேரடி வெயிலில் பணியாற்றுவதால் அவர்களுக்குச் சிறுநீரக செயல்திறன் பாதித்திருக்கலாமென மருத்துவர் குழு குறிப்பிட்டுள்ளது.
திறந்தவெளியில் அதிக வெப்பச் சூழலில் தினமும் பல மணி நேரம் வேலை செய்யும் விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு உடலில் விரைவாக நீர்ச்சத்து குறைந்து விடுகிறது.
இதனால் சிறுநீரகம் வெகுவாகப் பாதிக்கப்படும் என்றும், இதுவே சிறுநீரக செலிழப்புக்கு வழி வகுக்கிறது எனவும் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
















