ஜமைக்காவை கடுமையாகத் தாக்கிய மெலிசா புயலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் கரீபியன் நாடுகளான ஹைதி, டோமினிகன் குடியரசு மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகளைத் தாக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.
இது 174 ஆண்டுகளில் இல்லாத தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜமைக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மெலிசா புயல் கரையைக் கடந்தது.
புயல் கரையை கடந்தபோது மணிக்கு அதிகபட்சமாக மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
இதில் அந்நாட்டு உட்கட்டமைப்புகள் கடும் சேதமடைந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. மேலும், பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
















