சீனப் பொருளாதாரத்தை இந்தியா விஞ்சும் எனச் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ சியன் லூங் கணித்துள்ளார்.
2030-ம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய பொருளாதாரம் குறித்து பேசிய லீ சியன் லூங், இந்தியா ஒருநாள் சீனப் பொருளாதாரத்தையும் விஞ்சும் அளவுக்கு வாய்ப்புள்ளதாகக் கணிப்புகள் கூறுவதாகத் தெரிவித்தார்.
சீனாவின் மக்கள் தொகை ஏற்கனவே சுருங்கி வரும் நிலையில் இந்தியா இன்னும் 40 கோடி இளம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
















