இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் ஓட்டுநர் இல்லா கார் பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள விப்ரோ மற்றும் இந்திய அறிவியல் நிறுவனம் ஆகியவற்றுடன் தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவர்கள் அடங்கிய குழுவினர் தான் இந்த ஓட்டுநர் இல்லாத தானியங்கி காரை வடிவமைத்துள்ளனர்.
முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தில் தயார் செய்யப்பட்டுள்ள இந்தக் கார், பல்வேறு கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதற்கு ஏற்பச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஓட்டுநர் இல்லாத காரின் அறிமுக நிகழ்ச்சி தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இதனை உத்தராதி மடத்தின் சத்யாத்ம தீர்த்த சுவாமி அறிமுகப்படுத்தினார். பின்னர் அந்தக் காரில் மடாதிபதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கல்லூரி வளாகத்திலேயே பயணித்தனர்.
















