சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது சிலைக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நாடு சுசுதந்திரம் அடைந்த பிறகு 560க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைப்பதில் முயற்சிகள் மேற்கொண்ட சர்தார் வல்லபாய் பட்டேலை கவுரவிக்கும் வகையில், 2014ஆம் ஆண்டு முதல் அவரது பிறந்த நாள் தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது சிலைக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பட்டேலின் சிலைக்குக் கீழே வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி துணைநிலை ஆளுநர் வினைகுமார் சக்சேனா, முதலமைச்சர் ரேகா குப்தா ஆகியோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
 
			 
                    















