உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் உயரதிகாரிகள், சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தைப் பார்வையிட்டனர்.
தடயவியல் ஆய்வகம், பாதுகாப்பு நகர திட்டம் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பின்னர், சென்னை காவல்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அவர்கள், காவல்துறையின் செயல்திறன் மேம்பாடு, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்குறித்து ஆலோசனை நடத்தினர்.
மேலும், காவல்துறையின் அமைப்பு வளர்ச்சி மற்றும் தடயவியல் பிரிவின் தொழில்நுட்ப மேம்பாடுகுறித்து காவல்துறை அதிகாரிகளுக்குப் பரிந்துரைகள் வழங்கப்பட்டன.
 
			 
                    















