வேலூர் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.
ஜலகண்டேஸ்வரர் கோயிலில் நாள்தோறும் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநில, வெளிநாட்டு பக்தர்களும் தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில், வேலூரில் கொட்டி தீர்த்த கனமழையால் அகழியின் நீர்மட்டம் உயர்ந்து கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
















