ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில், பெருமாள் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபக்காவில் உள்ள வெங்கடேஷ்வர சுவாமி கோயிலில் ஏகாதசி மற்றும் சனிக்கிழமையை ஒட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யக் குவிந்திருந்தனர்.
அப்போது சாமி தரிசனம் செய்யப் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முண்டியத்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர்.
காயமடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
















