நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கோவைக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைச் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் சட்டவிரோதமாக இயங்கிவந்த டாஸ்மாக் கடையை நாம் தமிழர் கட்சியினர் சூறையாடினர்.
டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர், கடையின் உள்ளே சென்று மது பாட்டில்களை உடைத்தனர்.
மேலும், சட்டவிரோத டாஸ்மாக் கடையின் விற்பனையாளரைப் போலீசில் ஒப்படைத்த அவர்கள், இந்தச் சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
			















