வாக்குப்பதிவு அலுவலர்களின் முடிவில் திருப்தி இல்லையெனில் வாக்காளர்கள், மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகாரளிக்கலாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணி நடைபெற உள்ளது.
இதையொட்டி நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், வாக்காளர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டாலும், நிராகரிக்கப்பட்டாலும் அதற்கான காரணங்கள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
















