சென்னையில் விக்கு ஏற்றுமதி, கட்டுமான தொழில் நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னைக் கோடம்பாக்கத்தில் வசித்து வரும் விக்கு ஏற்றுமதி செய்யும் வெங்கடேசன் என்பவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சென்னைக் கோயம்பேட்டில் கட்டுமான தொழில் நிறுவனம் நடத்தி வரும் லோகேஸ்வரன் என்பவரது வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வரிஏய்ப்பு செய்து சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரை அடுத்து சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
			















