இந்திய கடற்படை மீனவ சமுதாயத்திற்கு பாதுகாப்பாக இருப்பதாகத் தமிழ்நாடு கடற்படை அதிகாரி சுவரத் மாகோன் தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படை சார்பில் சென்னையில் முதன்முறையாக டிசம்பர் 14 ஆம் தேதி மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது.
போதைப்பொருள் இல்லாத இந்தியா, பெண் ஆதிசக்தி ஆற்றல், இணையதள சூதாட்டத்திற்கு எதிரான நிலைப்பாடு என மூன்று கொள்கைகளை வலியுறுத்தும் விதமாக இந்தப் போட்டி நடைபெறுகிறது.
இதில் வெற்றி பெற்றால் ஒட்டு மொத்தமாக 10 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போட்டிக்கான டி-ஷர்ட்டை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி சுவரத் மாகோன் அறிமுகம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்திய கடற்படை மீனவ சமுதாயத்திற்கு பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வதாலே இலங்கை கடற்படை அவர்களைக் கைது செய்வதாகவும் சுவரத் மாகோன் கூறினார்.
















