கோவை செஞ்சேரிமலையில் தனியார் உரக் கடை உரிமையாளர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கம்மாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி கண்ணன், செஞ்சேரிமலையில் உள்ள தனியார் உரக் கடையில் உரம் வாங்கி தென்னை மரங்களுக்குத் தெளித்துள்ளார்.
அடுத்த சில மணி நேரத்தில் மரங்கள் சேதமடைந்ததால் அதிர்ச்சியடைந்த கண்ணன், சுல்தான்பேட்டை வேளாண்துறை அலுவலகம் முன்பு விவசாயிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட உரக்கடையில் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இருப்பினும் உரக்கடை மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள், பல்லடம்- பொள்ளாச்சி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவறிந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டோரை கைதுசெய்து சிறையில் அடைந்தனர். அப்போது பேசிய விவசாயி ஒருவர், உரக்கடை உரிமையாளர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்துவதாகக் குற்றஞ்சாட்டினார்.
















