கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே டாடா தொழிற்சாலை விடுதியின் குளியலறையில் கேமரா வைத்த வடமாநில பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
லாளிக்கல் பகுதியில் டாடா தொழிற்சாலை ஊழியர்களுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. விடுதியில் உள்ள குளியலறையில் கேமரா இருந்ததை பெண் ஊழியர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதுதொடர்பாக ஆலை நிர்வாகத்திடம் புகாரிளித்த ஊழியர்கள், விடுதி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து குளியலறையில் கேமரா வைத்த வடமாநில பெண் நீலா குமாரியை கைதுசெய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















