வாழப்பாடி அருகே நடந்த கலவரத்தை அடுத்து பாமக எம்எல்ஏ அருளுக்கு ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே வடுகத்தாம்பட்டி பகுதியில் பாமக எம்எல்ஏ அருள் மற்றும் அன்புமணி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தில் 9 கார்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில், மோதலில் பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, வாழப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர பகுதிகளில் பதற்றமான சூழல் காணப்படுவதால் பாமகவின் முக்கிய நிர்வாகிகளைப் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாமக எல்எல்ஏ அருள் வீடு அமைந்துள்ள அழகாபுரத்தில் சீருடை அணியாத போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பாமக எம்எல்ஏ அருளுக்கு ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















