பெங்களூருவில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்ததாத காகித பைகளைத் தயாரித்த 10 வயதுடைய 3 சிறார்கள் இளம் தொழில்முனைவோர்களாக மாறிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பசவேஸ்வரா நகரைச் சேர்ந்த ஆதித்யா, ஈஷான் மற்றும் சாரா ஆகிய 3 இளம் தொழில்முனைவோர்கள் 10 ரூபாய்க்கு காகிதத்தால் பைகளைத் தயார் செய்து மாத சந்தாவில் விற்பனை செய்து வருகின்றனர்.
வாடிக்கையாளர் ஒரு மாதத்திற்குத் தேவையான காகித பைகளை மொத்தமாக முன்பதிவு செய்யலாம் என்றும் சந்தாதாரர்களுக்கு வாரம் ஒருமுறை அவர்கள் கோரிய எண்ணிக்கையிலான பைகள் வீட்டிற்கே நேரடியாக வழங்கப்படும் என்று சிறார்கள் அழகாக விளக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெரிய நிறுவனங்களுக்கே சவால் விடும் வகையில், இந்த இளம் தொழில்முனைவோர் உருவாக்கியுள்ள இந்தச் சந்தா அடிப்படையிலான சேவை, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க உதவுவதுடன், இளம் தலைமுறையினரின் புதிய வணிகக் கண்ணோட்டத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
















