சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளை ஒட்டி, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் தேசிய ஒற்றுமை குறித்த விழிப்புணவு பேரணி நடைபெற்றது.
எஸ்எஸ்எஸ் அறிவியல் கல்லூரியில் தொடங்கிய இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும், போதை இல்லா இந்தியாவை உருவாக்க வேண்டும் போன்றவை பேரணியில் வலியுறுத்தப்பட்டது.
















