இந்தியா-நியூசிலாந்து இணைந்து செயல்பட்டால் பயனடையலாம் என அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார்.
அரசு முறை பயணமாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்
நியூசிலாந்து சென்றுள்ளார். ஆக்லாந்தில் அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை, பியூஷ் கோயல் சந்தித்துப் பேசினார்.
அப்போது இந்தியா-நியூசிலாந்து உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனர். பின்னர் பேசிய, நியூசிலாந்து பிரதமர், தங்கள் நல்ல நண்பரான அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். நியூசிலாந்திடம் சிறப்பான பொருளாதாரம் உள்ளதாகவும், இரு நாடுகளும் தங்களுக்குள் பொதுவான அம்சங்கள் உள்ள பகுதிகளில் இணைந்து செயல்பட்டால், பலன்களைப் பெற முடியும் எனவும் தெரிவித்தார்.
















