மூன்று டிஜிபிக்கள் கொண்ட பட்டியலை ஏற்க முடியாது என்று தமிழ்நாடு அரசு அளித்த மனுவை யுபிஎஸ்சி நிராகரித்து விட்டது.
தமிழகத்தின் டிஜிபி பதவிக்கான யுபிஎஸ்சி பரிந்துரைத்த பட்டியலில் இடம்பெற்றிருந்த மூன்று அதிகாரிகளின் பெயர்களை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்தது.
இது தொடர்பாகத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மூன்று அதிகாரிகளின் பெயர்களை ஏற்க மறுப்பதற்கான காரணங்களை விளக்கி யுபிஎஸ்சிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தத்தின் கடிதத்தை யுபிஎஸ்சி பரிசீலனை செய்து நிராகரித்தது.
இந்த விவகாரத்தில் முன்னர் அனுப்பிய பட்டியலில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும், தற்போதைய நிலையே தொடரும் என்றும் தமிழக அரசுக்கு யுபிஎஸ்சி மீண்டும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
















