வங்கதேசத்தில் அடிப்படைவாதிகளின் எச்சரிக்கைக்கு அடிபணிந்து அரசு பள்ளிகளில் இசை மற்றும் உடற்பயிற்சி வகுப்புகளை முகமது யூனுஸ் அரசு ரத்து செய்துள்ளது.
வங்கதேசத்தில் அண்மையில் அரசு தொடக்கப் பள்ளிகளில் இசை, உடற்பயற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களின் திறன்கள் மேம்படுத்தப்படும் என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அறிவித்தார்.
இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த அந்நாட்டின் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள், இத்திட்டம் இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என்றும் பள்ளிகளில் மத ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும், அரசு இந்தத் திட்டத்தைக் கைவிடாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்தனர்.
இந்நிலையில் அடிப்படைவாதிகளின் எச்சரிக்கைக்குப் பயந்து அரசு பள்ளிகளில் புதிதாக உருவாக்கப்பட்ட இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் பதவிகளை ரத்து செய்வதாக வங்கதேச அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
முதலில் திட்டத்தை அறிவித்துவிட்டு பிறகு எதிர்ப்பால் அதிலிருந்து பின்வாங்கிய முகமது யூனுஸ் அரசின் செயல் விமர்சனத்தைப் பெற்றுள்ளது.
















