அல்லு அர்ஜுனின் 22ஆவது படத்திற்கு இசையமைக்கச் சாய் அபயங்கர் இணைந்துள்ளார்.
சுமார் 800 கோடி ரூபாய்க்கு அதிகமான பொருட்செலவில் மிகப் பிரமாண்டமாக எடுக்கப்பட இருக்கிறது. இப்படத்தில் கோலிவுட், பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த அட்லீ இயக்குகிறார்.
அட்லீக்கு இது 6ஆவது படமாகும். 21 வயதான சாய் அபயங்கர், இசையமைப்பதற்காக இப்படத்தில் இணந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
















