அஜித்தின் ஏகே 64 படத்தில் முன்னணி நடிகர்கள் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குட் பேட் அக்லி படத்தைத் தொடர்ந்து, மீண்டும் அஜித்குமாரின் படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார்.
இது அஜித்குமாரின் 64-வது படமாகும். இப்படம் பான்- இந்தியா படமாக, பல மொழி ரசிகர்களைக் கவரும் வகையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ளது.
மேலும், விஜய் சேதுபதி மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர் இப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
















