பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் தூசியால் மூடப்பட்ட காரின் பின்புற கண்ணாடியில் அனிம் கதாபாத்திரத்தை வரைந்த டிக்டாக் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வாடிக்கையாளர் ஒருவர் பெட்ரோல் பங்கில் தனது காருக்கு எரிபொருள் நிரப்பச் சென்றுள்ளார்.
அப்போது தூசியால் மூடப்பட்ட காரின் பின்புற கண்ணாடியில், கோகு எனும் அனிம் கதாபாத்திரத்தைப் பெட்ரோல் பங்க் ஊழியர் தத்ரூபமாக வரைந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
44 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் 9 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலாகியுள்ளது. பலரும் பெட்ரோல் பங்க் ஊழியரின் அசாத்திய திறமையைப் பாராட்டி வருகின்றனர்.
















