தாய்லாந்தில் மிஸ் யுனிவர்ஸ் போட்டியாளர் அவமதிக்கப்பட்டதை கண்டித்து அனைத்து நாட்டைச் சேர்ந்த அழகிகளும் மொத்தமாக வெளியேறிய வீடியோ வைரலாகி வருகிறது.
தாய்லாந்தின் பாங்காக்கில் 2025-ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் கலந்து கொண்ட மெக்சிகோவை சேர்ந்த அழகியான பாத்திமா போஷ், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கொடுத்த உள்ளடக்கம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுள் ஒருவரான தொழிலதிபர் நவத் இட்சரகிரிசில், மெக்சிகோ அழகியை முட்டாள் எனத் திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பாத்திமா போஷ், பெண்களை அவமதிப்பதாகக் கூட்டத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு ஆதரவாக மேலும் பல நாட்டைச் சேர்ந்த அழகிகளும் அங்கிருந்து வெளியேறினர்.
இதனையடுத்து தொழிலதிபர் இட்சராகிரைசில் கண்ணீருடன் ஊடகங்கள் முன் உரையாற்றினார்.
அப்போது தான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும், மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார்.
இந்தச் சர்ச்சைகளுக்கு மத்தியில் வரும் 21-ம் தேதி பாங்காக்கில் நடைபெறும் நிகழ்வில் வெற்றியாளருக்கு முடிசூட்டப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
















