பிலிப்பைன்ஸில் கல்மேகி புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது.
கல்மேகி புயலால் வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கடும் சேதத்தைச் சந்தித்து வருகின்றன.
இந்நிலையில் புயலால் ஏற்பட்ட அசம்பாவிதங்களில் சிக்கி பிலிப்பைன்ஸில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. 135 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 96 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் தெரிவித்துள்ளார்.
















