தமிழகம் முழுவதும் 2-ஆம் நிலை காவலர் பணிக்கான தேர்வு 45 மையங்களில் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், கடந்த ஆகஸ்ட் மாதம் காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறைகளில் காலியாக உள்ள மூன்றாயிரத்து 665 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
இதற்கு 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பத்திருந்த நிலையில், தமிழகம் முழுவதும் 45 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், நெல்லையில் 9 மையங்களில் நடைபெறும் தேர்வில் நான்காயிரத்து 379 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதனை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் சுமார் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















