குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நகைக்கடையில் மிளகாய் பொடியைத் தூவி திருட முயன்ற பெண்ணை கடைக்காரர் அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அகமதாபாத்தில் இயங்கி வரும் நகைக்கடை ஒன்றுக்கு பெண் ஒருவர் முகம் முழுவதையும் மறைத்துக் கொண்டு வாடிக்கையாளர் போல சென்றுள்ளார்.
அப்போது அப்பெண் மறைத்து வைத்திருந்த மிளாகாய்ப் பொடியை, கடைக்காரர் மீது தூவி கொள்ளையடிக்க முயன்றார். சுதாரித்து கொண்ட கடைக்காரர், அந்தப் பெண்ணைச் சரமாரியாக அடித்துத் தாக்கினார்.
ஒரு நிமிடத்தில் 17 முறை கன்னத்தில் அறைந்த சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாகக் கடைக்காரர் புகார் கொடுக்க மறுத்த நிலையிலும், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருட முயன்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
















