நாகையில் வி.ஏ.ஓ. அதிகாரியை 2 திருநங்கைகள் பணத்திற்காகக் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
வாழக்கரை பகுதியைச் சேர்ந்த ராஜாராமன் என்பவர் கிராம நிர்வாக அலுவராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த 2024ஆம் ஆண்டு முதல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்காக நாகை நீதிமன்றத்திற்கு சென்றார்.
இந்நிலையில், ஈசிஆர் சாலையில் முகத்தில் பயங்கர காயங்களுடன் அவர் உயிரிழந்து கிடந்தார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இரவில் ராஜாராமன் போதையில் படுத்திருந்ததாகவும், அப்போது அங்கு வந்த செல்லுரைச் சேர்ந்த நிவேதா, ஶ்ரீகவி ஆகிய இரண்டு திருநங்கைகள் அவர் முகத்தில் கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலை செய்துவிட்டு, பணம், செல்போன், மோதிரம் ஆகியவற்றை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
















